WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

NFTE-BSNL சங்கத்திற்க்கு அனைத்து ஊழியர்களையும் ஆதரவாக திரட்டிடுவோம்...... !

Friday, September 15

        தமிழ் மாநில சங்க செயற்குழு

 NFTE -BSNL
தமிழ் மாநில சங்க செயற்குழு
இடம்மாஸ் திருமண மஹால்,ராமநாதன் மருத்துவமனை  அருகில்,தஞ்சாவூர்நாள் 06/10/2017 காலை 0930 மணி
அறிவிப்பு
தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 06/010/2017 கிழமை காலை 0930 மணிக்கு தோழர்  P.காமராஜ் ,மாநில தலைவர் தலைமையில்  நடைபெறும்.
ஆய்படு பொருள்
  • சென்ற கூட்ட முடிவுகள்- பரிசீலனை
  • ஊதிய மாற்றம்-போனஸ்-இன்றைய நிலை
  • டில்லி நவம்பர் தார்ணா,
  • அக் -12,13 மத்திய செயற்குழு
  • CSC – சேவை தனியார் மயம் நோக்கி-எதிர்ப்பு போராட்டதிட்டம்.
  • கிளை மாநாடுகள், செயல்பாடுகள்- உறுப்பினர் சேர்க்கை
  • அமைப்பு நிலை-மாநில சங்க நிர்வாகிகளுக்கு பொறுப்பு
  • பிரச்சனைகள், தலமட்ட குழு, சேமநல நிதி கூட்டம்,
           ஒர்க் கமிட்டி செயல்பாடுகள்- பரிசீலனை
  • நிதி நிலை,
  • இதர தலைவர் அனுமதியுடன்
மாநில செயற்குழு தோழர்கள் செயற்குழு இரவு 0800 மணி வரை நடைபெறும் வரை  அவசியம் இருந்திடல் வேண்டும்.

தோழமையுடன்,
நடராஜன், மாநில செயலர்


Saturday, May 6

பயிலரங்க முகாமில் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர்அண்ணன் அறிவுமதி யுடன் ...
புதுச்சேரி மாநில கலைஇலக்கிய பெருமன்றம் ..நடத்திய ..கலைஇலக்கியமும் ...பண்பாடும் ..சமூகமும் ...குறித்த ஒருநாள்  பயிலரங்கம், மக்கள் தலைவர் தோழர் வ .சுப்பையா நினைவு இல்லத்தில்இன்று (06-05-2017) நடைபெற்றது. தோழர்கள்.இரா .விசுவநாதன், தோழர் சி  மகேந்திரன்,தோழர் இரா காமராசு, திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ,தோழர் அ மு சலீம் ,மு கு இராமன் ,எல்லை சிவக்குமார் ,வீர முருகையன் ,கி முருகன் ,நவீன் தன்ராமன் ,மு சி ராதாகிருஷ்ணன் ,மு ஆதிராமன் ,இரா .தங்கமணி ,வ சுப்பையா, உ. ஹாமலதா  மற்றும் பலர் ...   முகாமில் தாமரை ,வாழ்நாள் சந்தா தோழர் பாலசுப்ரமணியன்,தோழியர் நீலம் அருள்செல்வி,  ஆண்டு சந்தாமுதல் தவணையாக 15ந்தும் வழங்கப்பட்டது .

Wednesday, March 29


வீட்டு வாடகை ரசீது கேள்வியும் பதிலும்!!

கேள்வி : வருமான வரி விலக்கிற்காக பலர் வாடகை ரசீது கொடுத்துள்ளனர். 
    இப்போது வீட்டு உரிமையாளரின் PAN Number உடன் உரிய படிவத்தில் கொடுக்க வேண்டும் என AO Drawal தெரிவிக்கிறார். ?இல்லை எனறால் கூடுதல் வரி பிடித்தம் இருக்கும் என்கிறார் .
    PAN No. கொடுப்பது எப்படி சாத்தியம் ? எத்தனை வீட்டு உரிமையாளர்கள் PAN No. வைத்திருக்கிறார்கள் ?

பதில்: மாத வீட்டு வாடகை 8333 க்குள் அல்லது வருட மொத்த வாடகை 1,00,000 க்குள் இருந்தால் வீட்டு உரிமையாளரின் PAN No. கொடுக்கவேண்டியதில்லை. 
     1,00,000 க்கு மேல் இருந்து வீட்டு உரிமையாளரிடம்  PAN No. இல்லை என்றால் ஊழியர் ஒரு declaration கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால் அனைவரும் printed ரசீது கொடுக்க வேண்டும் .
புதுடெல்லியில் போராடி கொண்டிருக்கும் நமது விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் து.ராஜா MP

Saturday, March 11

இரவு தூக்கம் கலைந்தேன் இன்று  ....
இந்த சமூகத்தின் நிலை கண்டு ....
நாம்மட்டும் நல்லவராய் இருப்பது ...
நாட்டுக்கு உதவாது தென்று ....

இரண்டு ஆண்டாய்....
பழுதான மின்துறையின்...
கேபிள் பழுதுநீக்க வந்தவர்..
கேட்ட தொகைகண்டு ...

டெல்லி முதல்வர் போல் ...
மக்களுக்காய் உழைக்க ...
எத்தனை பேர் வந்தாலும் ...
என்னசெய்ய ...

செங்கொடி தோழர்களின் ....
பல்லாண்டு உழைப்பைபோல ...
பயனற்று போனதுதான் ...
மிச்சம் ....

இந்த சமூகம் உறுப்படுமா ...
என்கிற வேதனை ஒருபக்கம் ...
இருப்பினும் மாற்றத்திற்க்காக ...
மனம் தளராது பாடுபடு தோழா ...
                                                                   என்றும் உங்கள்
                                                                           இரா .த...