WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

NFTE-BSNL சங்கத்திற்க்கு அனைத்து ஊழியர்களையும் ஆதரவாக திரட்டிடுவோம்...... !

Monday, September 19

சுயநலத்திற்காக ....
கட்சியிலும் , தொழிற்சங்கத்திலும் ....
கம்யூனிசம் பேசும் தலைவர்கள்....
சாதியியத்தை பாதுகாக்குகிறார்கள்....

முப்பது ஆண்டுகளாக ....

உண்மையாக, நேர்மையாக....
கட்சிக்காக, தொழிற்சங்கத்தில் உழைப்பவர்கள்.... 
ஒதுக்கப்படுகிறார்கள்....

கட்சிக்காக செலவழித்தவர்கள்  ....

கொள்கையை கடைபிடித்தவர்கள்  ....
நடுநிலைமையாக எதையும் சாராதவர்கள்....
நடுரோட்டில் நிற்கிறார்கள் .....

இருப்பினும் எங்களைப்போல.....

தோழர்கள் இருப்பதால் .....
பொதுவுடமை நிலைக்கிறதே....
இதுதான் பொதுவுடமை கொள்கையோ ....

Monday, September 12நமது அரங்கில்...
எதிர்க்கருத்து சொல்பவனை ஏளனம் செய்வதும்...
ஒத்து ஊதுபவர்களை உயரத்தில் வைப்பதும்... தொடர்கிறது...
இது... அழகல்ல... இயக்கத்திற்கு ஆரோக்கியமல்ல...

                                                           நன்றி ...காரைக்குடி ...

Friday, September 9

பிஎஸ்என்எல்
வழங்கும் 83 பைசாவில்
ஒரு GB
ப்ராட்பேண்ட் சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின்
தலைவர் உயர்திரு அனுபம் ஸ்ரீவத்சவா
நமது நாட்டு மக்களுக்கு
வேறு எந்த நிறுவனமும்
வழங்காத அளவுக்கு
மிகக் குறைந்த கட்டணத்தில்
லேண்ட்லைன் ப்ராட் பேண்ட் திட்டத்தை அறிவித்துள்ளார்.

திடடத்தின் பெயர்
"EXPERIENCE UNLIMITED BB 249"
மாதக் கட்டணம் ரூ 249
பயன்பாட்டு அளவு
எல்லையற்றது
(UNLIMITED)
வேக அளவு
2Mbps
"இத்திட்டத்தில் ஒரு மாதம்
முழுமையும் தொடர்ந்து
பயன்படுத்தினாலும்
300GB  வரை
டவுன்லோடுசெய்யலாம்.
ஒரு GB டவுன்லோடு செய்ய கட்டணம் ஒரு ரூபாய்க்குக் குறைவுதான்"அதாவது 83 பைசா மட்டுமே என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் 09.09.2016 முதல் அமலுக்கு வரும்.

இவ்வளவு குறைந்த கட்டணத்தில் எந்த ஒரு நிறுவனமும் ப்ராட்பேண்ட் சேவையை வழங்குவதில்லை.
இத்திட்டம் ஆறு மாதங்களுக்கு   அமலில் இருக்கும்.


அதன் பின் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஊக்கத்தொகை 

புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை 
புது இணைப்புக்களைப் பெற்றுத்தரும் BSNL ஊழியர்களுக்கு 
ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தரைவழித்தொலைபேசி இணைப்பிற்கு ரூ.100/-
  • தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்பிற்கு ரூ.200/-
  • முதல் பில் கட்டப்பட்டபின் ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்படும்.
  • 12/09/2016 முதல் இத்திட்டம் அமுலுக்கு வருகிறது.

தோழர்களே...
நமது நிறுவனம் மிகவும் மலிவான விலையில்...
இந்தியாவில் வேறெந்த நிறுவனத்திலும் இல்லாத வகையில்..
புதுப்புது அதிரடி திட்டங்களை.. 
மக்களைக் கவரும் திட்டங்களை...  
தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை 
இணைப்புக்களில் அறிவித்துள்ளது.
இந்த சலுகைகளும்... 
நமது சேவைகளும் மக்களைச்சென்றடைய..
நாம் நமது பங்கைச்செலுத்துவோம்...

ஊக்கமுடன் பணிபுரிவோம்..
ஊக்கத்தொகை பெறுவோம்...

Wednesday, August 17

ஒரு BSNL வாடிக்கையாளரின் BSNL வளர்ச்சிக்கான ஆலோசனை ...bsnl கூட இலவசம் கொடுத்து மக்கள கவர நினைச்சிட்டு இருக்கு போல. இவ்ளோ technologyல அவனவன் 2G 3G 4Gனு போய்ட்டு இருக்கான். bsnlல என்ன Gனு இதுவரை தெரில. வெறும் DATAனு தான் recharge பன்றோம். Plan மட்டும் தான் வேற வேற இருக்கு. speedல எந்த வித்யாசமும் இல்லயே. Broadband ஒரு படி மேல. 2MBps எப்பொ வருதுனு பார்க்ரதுக்குள்ள 'crossed the limit' message வந்துடுது. ஆயிரகணக்குல பில் கட்ரது தான் மிச்சம். இதற்கிடையில் 1 மாசத்துக்கு குறைந்தது 3 முறை 198 (BP Sugar checking போல). வசதிகள்ளயும் performanceலயும் விலைலயும் கொஞ்சம் கவனம் செலுத்தினா வாடிக்கையாளர் தானா வந்து விழ போறாங்க. நாட்லயே பெரிய network. Performance? 15 வருஷமா bsnl mobile service 30 வருஷமா bsnl landline sevice மட்டுமே பயன்படுத்றோம்னு பெருமை மட்டும் பட்டுக்கலாம். பல நெடுநாள் வாடிக்கையாளர்களின் மனக்குமுறல் இதுவாகவே உள்ளது.
(யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இப்பதிவு மேற்கொள்ளப்படவில்லை)
Shiva Natarajan....
நிற்பேன்... போராடுவேன்...


இன்னும்..
நாங்கள் எதையும் காணவில்லை..
கனக்கிறது வாழ்க்கை...

கைகள் கட்டப்படவில்லை...
சுதந்திரம்!
ஆட்டம் என்னவோ..
பழைய கோமாளி ஆட்டம்தான்...

ஓட்டம்… 
கால்கள் தரிக்காத ஓட்டம்..
எங்கும் போய்ச் சேராத ஓட்டம்...

இது வரமா? இல்லை சாபமா?
நான் நடப்பட்டேனா?
பிடுங்கியெறியப்பட்டேனா?

ஓடிவிடத் துடிக்கிறேன்...
எங்கே ஓடுவேன்…
போகுமிடம் எதுவுமில்லை...
நின்றுதான் தீரவேண்டும்..

முழந்தாளில் சரியமாட்டேன்..
நிற்பேன்... போராடுவேன்…
உன்னதமான காலம்...
வரத்தான் போகிறதென்று..
நம்பிக்கைக் கொள்வேன்…
போராடுவேன்…

ஏனென்றால்..
நாங்கள் எதையும் காணவில்லை...
இன்னும்… 

விடுதலைத்திருநாளில்.. அடிமைகளின்  நினைவாக...
ஒடுக்கப்பட்ட கறுப்பினக்குயில்… – டிரேஸி சாப்மன்...கவிதை
TRACY CHAPMAN  in   “NOTHING YET”
நன்றி காரைக்குடி வலைத்தளம் .....