WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, March 18


அவதூறு பரப்பாளர்கள்  தோல்வி தழுவுவர்  !
      

சென்ற ஆண்டு நடந்த  சங்கத் தேர்தலின்போது அவதூறு நாயகர்களான BSNLEU சங்கத்தார் தோழர் C.K.மதிவாணன் அவர்களைப் பற்றி ஒரு அவதூறைப்  பரப்பி ஆதாயம் பெற முயற்சித்தனர்.  தேர்தல் முடிந்தவுடன் அது புஸ்வானமானது ! 

 தற்போது அதே அவதூறு பரப்பாளர்கள், வேலூர் BSNLEU வெப் சைட்டில் ஒரு அவதூறை பரப்பி டிஜிட்டல் பேனர் வெளியிட்டுள்ளனர்.

அதில் தோழர் மதிவாணன் மற்றும் தோழர் வீரராகவன் ஆகியோர் 1300 கோடி ரூபாய் மெகா ஊழல் நடத்த திட்டமிட்டு இருப்பதை தடுக்க BSNLEUவுக்கு வாக்களிக்க வேண்டுமாம் !

  நமது கேள்வியெல்லாம், தோழர் வீரராகவனை தலைவராக முன் மொழிந்து தேர்ந்தெடுத்து நான்கு ஆண்டுகள் அவரை நல்லவர், வல்லவர் என்று புகழ்ந்தது யார் ?  BSNLEU சங்கத்தினர் தானே ?


 இவர்களின் கட்சிக் கட்டளையை ஏற்று இயக்குநர் குழு கூட்டத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாக டைரக்டர் என்ற முறையில் ஒரு ஓட்டும், தலைவர் என்ற முறையில் இன்னொரு ஓட்டும் போட்டு மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்க ஒத்துழைக்காத காரணத்தால் தானே இன்று வேறு மாதிரி பேசுகின்றனர் ?

  நான்கு வருடங்களாக இவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் தானே சொஸைட்டி இருந்தது ? 

இந்த காலத்தில் ஏன் இவர்களால்  நிலத்தை பிரித்து கொடுக்க முடியவில்லை ?  

நிலத்தை சைட்டாக பிரிக்க CMDA வின் அனுமதியை ஏன் பெற முடியவில்லை ? 

நிலத்தை  விற்று அதில் வரும் லாபத்தில் 40000 ரூபாயை ஊழியர்க்கு இனாமாக வழங்க முடியவில்லை ?

 700 உறுப்பினர்களுக்கு நிலத்தை  பிரித்து கொடுப்பது அதிகமான உறுப்பினர்களுக்கு பலன் தருமா ?

  ஆயிரக்கணக்கான  அடுக்கு மாடி கட்டுவதால் அதிகமான உறுப்பினர்களுக்கு பலன் தருமா ?

 சொஸைட்டி விதிகளின்படி டிவிடெண்ட் தவிர வேறு வகைகளில் உறுப்பினர்களுக்கு பணமாக 
 தர முடியாது  என்பது இவர்களுக்கு தெரியாதா ? இல்லை தெரிந்தும் நடிக்கிறார்களா ?


அடுக்கு மாடி கட்டும் பணி வெளிப்படையாக நடக்கும், அனைத்து சங்க மாநிலச் செயலர்களும் கொண்ட கண்காணிப்பு குழு அதனை மேற்பார்வை இடலாம் என்று கூறிய பின்னும் அவதூறு பரப்புவது உள்நோக்கம் கொண்ட கண்டிக்கத்தக்க செயலாகும்

    2G ஊழலை, தயாநிதி மாறனின்  323 ISDN முறைகேட்டை   எதிர்த்து சமரசமின்றி போராடிய 
Whistle Blower தோழர் மதிவாணன் அவர்களைப் பற்றி, 2G ஊழலுக்கு ஒத்து ஊதிய BSNLEUவின் இந்த அவதூறு பிரச்சாரம்   சென்னை மற்றும் தமிழக  BSNL ஊழியர்களிடம் எடுபடாது. 

    NFTE கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

        BSNLEUவின் கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவும் என்பது உறுதி.                     

Monday, March 17

2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியிலும் மாற்றலாம் ரிசர்வ் வங்கி விளக்கம்!!!





வங்கிகளுக்கு அறிவுரை........

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வங்கிகள்  அவற்றை கவுன்டர்கள் மூலமாகவோ, ஏடிஎம்கள் மூலமாகவோ திரும்பவும்  புழக்கத்தில் விட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.  இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் விளக்கங்கள்........

2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை 2015 ஜனவரி 1ம்  தேதி வரை மக்கள் எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம். எத்தனை  ரூபாய் நோட்டுக்களை வேண்டுமானாலும் மாற்றலாம். எண்ணிக்கையில்  கட்டுப்பாடு இல்லை. ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில்  வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றுபவர் வங்கியில்  கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.  2005க்கு முந்தைய நோட்டுக்களுக்கு பதில் வேறு நோட்டுக்களை  வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. விருப்பப்பட்டால்,  ஒருவரது கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம். பணத்தை  மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Friday, March 14

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து 18 தொகுதிகளில் (தலா 9 தொகுதிகள்) போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலுர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வட சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்ச் 16-ந் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மார்க்சிஸ்ட் செயலாளர் தெரிவித்தார்.

இதேபோல் 17-ந்தேதி தங்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் அறிவித்தார். இந்த 18 தொகுதிகள் தவிர பிற தொகுதிகளில் பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், யாரை ஆதரிப்பது? என்பதை பின்னர் அறிவிப்பதாகவும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Wednesday, March 12

Meeting of all Unions and Associations of the Non-Executives of BSNL, held at New Delhi. A meeting of all the unions and associations of the Non-Executives of BSNL was held at New Delhi, yesterday the 11-03-2014. The meeting was held in the office of BSNL MS and was attended by the general secretaries of BSNLEU, NFTE BSNL, FNTO, BTEU BSNL, SNATTA, NFTBE and BTU BSNL. It was also attended by com.V.A.N.Namboodiri, President, BSNLEU and representatives of BSNL MS, TEPU, BSNL ATM and ITEF. Com. Chandeswar Singh, GS, NFTE BSNL presided over the meeting. Com.P.Abhimanyu, GS, BSNLEU, welcomed every one and explained about the purpose of the meeting. Thereafter, a detailed discussion took place on the pending burning issues of the Non-Executives as well about the indifferent and insensitive attitude of the BSNL Management, towards the settlement of them. The issues that are to be taken up with the Management were identified. It was decided to immediately submit a memorandum on the pending issues to the Management and also to go on struggle, demanding settlement. It was decided that the struggle will take place after the forthcoming elections to the parliament. However, in view of the urgency of the issues, it was decided to conduct a dharna by the General Secretaries in the Corporate Office, in this month itself.
                                                          chq...... 
Joint Action Committee (JAC) of the Unions and Associations of the Non-Executives of BSNL formed. With a view to conduct sustained struggles for the settlement of the important and burning problems of the Non-Executives, it was decided to form a platform of the Unions and Associations of the Non-Executives of BSNL. Accordingly the Joint Action Committee of the Unions and Associations of the Non-Executives of BSNL was formed in yesterday's meeting. The following comrades are unanimously elected as the office bearers of the JAC. 

President: Com.Chandeswar Singh, GS, NFTE BSNL
Convener: Com.P.Abhimanyu, GS, BSNLEU
Joint Convener: Com.Jayaprakash, GS, FNTO
Joint Convener: Com.Pawan Meena, GS, SNATTA
Treasurer: Com.R.C.Pandey, GS, BTEU BSNL
All the General Secretaries of the affiliated Unions and Associations will be the members of the JAC.

                                                     chq...... 

Tuesday, March 11

  சென்னை கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல்...!

              நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...!


தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

தேர்தல் நாள்
இடம்
மார்ச் 27
சேலம், வேலூர், தர்மபுரி, தஞ்சாவூர், கும்பகோணம்.
ஏப்ரல் 1
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில், காரைக்குடி.
ஏப்ரல் 3
சென்னை அனைத்து இடங்களுக்கும்
ஏப்ரல் 10
CGMT, STR, Project
ஏப்ரல் 15
Civil, கோலார், மைசூர்
ஏப்ரல் 17
கோயம்புத்தூர், ஈரோடு
ஏப்ரல் 21
கடலூர், புதுச்சேரி, திருச்சி.
ஏப்ரல் 24
பெங்களூர்

Saturday, March 8

மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் ...!!


மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் "உலக மகளிர் நாள் விழா" 8-.3.-2014 அன்று நம்நாடு உட்பட உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டின் மார்ச்த் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, "உலக மகளிர் நாள்" என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை உறுதியோடு எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம்......!

Monday, March 3

62! - முடிவு இல்லை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் பஞ்சப்படி உயர்வு
  • EPFO  திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் ஆயிரம்
  • ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி


இவையே 28.02.2014 அன்று 2014 தேர்தலுக்கு முன் கூடிய கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட ஓய்வு வயது 62 என்பது பற்றி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
NFTE-CHENNAI TELEPHONES
BSNL-MTNL  MERGER OUR VIEW POINTS
ஊழியர் சங்கங்களோடு கலந்து பேசாமல் BSNL & MTNL ஆகிய இரு அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் அரசு தன்னிச்சையாக இணைக்கும்  வழிமுறையை நாம் கடுமையாக எதிர்க்கும் அதே வேளையிலே, இத்துறையில் இரண்டு அரசு நிறுவனங்கள் செயல்பட வேண்டியது இல்லை என்பதே நமது ஆழமான கருத்து.

ஆகவே, இது குறித்து நிர்வாகம் சங்கங்களோடு கலந்து பேசும்போது, கவனிக்க வேண்டியகீழ்க்கணட ஆலோசனைகளை முன் வைக்கிறோம் .....

 1. BSNL
மற்றும் MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டங்களில்  பாரபட்சம் கூடாது. ( No discrimination ) 

MTNL
ல் பணியாற்றுவோர்க்கு BSNLல் பணியாற்றும் erstwhile DOT    ஊழியர்க்கு வழங்குவதுபோல, அரசு பென்சன் வழங்க சமீபத்தில் அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.ஆனால், 1-10-2000 க்கு பிறகு வந்த ஊழியர்க்கு  அரசு பென்சனும் கிடையாது, GPF  திட்டமும் கிடையாது. இணைப்பு வரும்போது இந்த பாரபட்சம்  நீக்கப்பட  வேண்டும்.

 2.
தற்போது MTNLல் பணியாற்றுவோர், BSNLல் பணியாற்றுவோரைவிட அதிகமான சம்பளம் பெறுகின்றனர். இந்த பாரபட்சம் நீக்கப்படவேண்டும்

3.
பங்கு மார்கெட்டில் விற்கப்பட்ட MTNL  பங்குகளை அரசு திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.   (Buy back thஎ shares of MTNL). புதிய நிறுவனம் 100% அரசு நிறுவனமாக, ஷேர் மார்கெட்டில் லிஸ்ட் செய்யபடாத (unlisted ) நிறுவனமாக இருக்கவேண்டும்.

4. BSNL & MTNL
ஆகிய இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டம் அடைவதால், அரசு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு சிறப்பு பொருளாதார சலுகைகள் வழங்கிட வேண்டும்.  அதன் பிறகே இணைப்பு அமலாக்கப்
பட  வேண்டும் 

5.
இணைப்பை ஏற்றுக் கொள்ளும் முன் மேற்கண்ட பிரச்னைகளைப் 
  பற்றி சங்கங்கள் தீவிரமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 
வேண்டும். 

 
மேற்கண்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்க அரசு முன்வராத பட்சத்தில் 
FORUM தலைமை, MTNL சங்கங்களோடும் கலந்து பேசி வேலைநிறுத்த செய்திட வேண்டும்.

 
சில  விஷயங்களை வெறுமே எதிர்ப்பதால் மட்டுமே பயன் ஏதும் இராது என்பதே நமது ஆழமான கருத்து.நமது கருத்துக்கு ஃபோரம் தலைமை செவிமடுக்கும் என்று நம்புகிறோம் .