WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, November 17

BSNLEU சங்கத்தின் பொய் பிரச்சாரம்..........

சென்னை தொலைபேசி மாநிலத்தின் BSNLEU சங்கம் NFTE சங்கத்தின் மீது பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதால் நாம் பதில் கொடுக்க வேண்டி உள்ளது. இது வருகின்ற 7வது சங்க தேர்தலை குறி வைத்து சொல்லப்பட்டது என கருதுகிறோம். நாம் ஒற்றுமை என்ற பதாகையின் கீழ் நின்றாலும் BSNLEU சங்கத்தின் பொய் பிரச்சாரத்தினை ஊழியருக்கு விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
1.    NFTE,FNTO and BTEF செப்டம்பர் 2௦௦௦ நடத்திய வரலாற்று சிறப்பு வாய்ந்த பென்ஷன் போராட்டம் காரணமாகவே நாம் பொதுத்துறை ஆனபிறகும் பென்ஷன் பெற்று வருகிறோம். அந்த போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் அபிமன்யு மற்றும் அவரது தொண்டர்கள். 08-09-2000 நடந்த அந்த போராட்டத்தில் அதனை போலிஸ் துணை கொண்டு உடைக்க ஐந்தாம்படை வேலையை செய்தனர். நூற்றுக்கணக்கான நம் தோழர்கள் அன்று கைது செய்யபட்டனர். அதன் காரனமாகவே நாம் இன்று அரசின் பென்ஷன் பெற்று வருகிறோம். எந்த பொதுத்துறையிலும் இது போல் நிகழ்வு நடந்ததில்லை. ஆனால்2004-ல் நாம் அங்கிகாரத்தை இழந்தபிறகு அந்த பென்ஷன் பிரச்சனையை நீர்த்து போகச் செய்தனர் BSNLEU சங்கத்தினர். 2006- ஆம் வருடம் நாம் 2000 போட்ட ஒப்பந்தமான பென்ஷன் அரசே தனது வைப்புநிதியிலிருந்து தரவேண்டும் என்பதை குலைக்கும் வண்ணம் போடப்பட்ட உத்தரவை எந்த எதிர்ப்பும் காட்டாமல் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். அந்த உத்தரவின்படி அறுபது சதவிதம் அரசும் மீதி நாற்பது சதவீதம்  BSNL லும் பென்ஷன் தரவேண்டும் என உத்தரவு ஆனது. இது ஒரு தவறான உத்தரவு என்பதை அன்று அங்கீகார போதையில் இருந்த அபிமன்யுவிற்கு ஏனோ புரியவில்லை. ஒன்பது ஆண்டு காலம் மௌனமாய் இருந்துவிட்டு இப்பொது திடிரென்று ஞானோதயம் தோன்றியது ஏனோ ?
2.    தலைவர் குப்தாவும்  ஞானய்யாவும் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் ஒப்பந்தத்தில் கையிழுத்து இட்டபோது அதனைதொழிலாளிக்கு எதிரானது என்று கூக்குரல் இட்டவர்கள் மோசமான இலாபத்துடன் இணைந்த போனஸ் ஒப்பந்தத்தில் கையிழுத்திட்டனர். அதன் பிறகே நாம் கடந்த ஆறு வருடமாக போனஸ் கிடைக்காத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். அதனை எதிர்த்து நம் பல்வேறு போராட்டங்களை செய்தபோது  இலாகாவின் நிதி நிலை சரியில்லை அதனால் போனஸ் கிடைக்காது என்று பிலாக்கினம் பாடினார்அபிமன்யுஅது நாம் நிறைய சம்பளம் வாங்குகிறோம் அதனால் போனஸ்கேட்பது சரியில்லை என்றார். இனி போனஸ் என்பது காலாவதியான ஒன்று என்று கூறினர். ஆனால் நாம் சென்ற முறை அங்கிகாரம் பெற்ற பிறகு அந்த பார்முலாவை மாற்ற ஒப்புக்கொண்டனர். இது  NFTE. – க்குகிடைத்த முதல் வெற்றியாகும்.
3.    சென்னை தொலைபேசியின் BSNLEU சங்கம் நாமும் FNTO சங்கமும்2000,-ஆம் ஆண்டில் பொதுத்துறையை ஆதிரித்த பாவத்தை கழுவவே இப்போது அதிகாரிகள் ஊழியர் கூட்டமைப்பில் சேர்ந்திருப்பாதாக வாய் கூசாமல் சொல்கின்றனர். இதனை நாம் சட்டை செய்ய தயாரில்லை.BSNLEU சங்கம் அகில இந்திய பொது செயலரும் அவருடைய மாநில செயலரின் கருத்தை புறக்கணிப்பார் என நம்புகிறோம். இது போன்று நம்மை எரிச்சல் அடைய செய்யும் கருத்துகளை சொல்லும் சென்னை தொலைபேசி BSNLEU மாநில செயலரால் நாம் இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேற மாட்டோம். ஒற்றுமை குலைப்பு எங்கள் வேலைஇல்லை. வேறு வழில்லாமைல் பொய் பிரசாரத்தை முறியடிக்கவே இந்த கட்டுரை.


------ NFTE-BSNL  சென்னை தொலைபேசி மாநிலம்

No comments:

Post a Comment