WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, November 23

சாதித்து காட்டியது NFTE-BSNL
நமது நிர்வாகம் ஒருவழியாக போனஸ் பற்றி முடிவெடுக்க கமிட்டி ஒன்றை நியமித்து உள்ளது. அதில் நமது அகில இந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது ஊழியர் தரப்பு தலைவர் என்ற முறையில் இடம்பெற்றுள்ளார். நம்முடைய விடா முயற்சியால் மட்டுமே நிர்வாகம் நான்கு வருடங்களாக போனஸ் கொடுக்கமுடியாது என்ற பார்முலாவை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து அதனை பற்றி முடிவெடுக்க கமிட்டி அமைத்துள்ளது. ஊழியருக்கு போனஸ் கிடைக்காத்தற்கு காரணமான தவறான பார்முலாவை ஒத்துக்கொண்ட்து  BSNLEU. BSNLEUதான் அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை இதனை ஏற்றுகொண்ட்து என்பது அனைவரும் அறிந்ததே. நிர்வாகத்தை இந்த பார்முலாவை மாற்ற வேண்டும் என்று நிர்பந்திக்க தவறியது என்பதை ஊழியர்கள் அனைவரும் அறிவர். இப்போது NFTE-BSNL
அங்கீகாரம் பெற்ற சங்கமாக உள்ளதால் அது நிர்வாகத்தை இது குறித்து நிர்பந்திக்க முடியும். போனஸ் லாபம் வந்தாலும் வராவிட்டாலும் தரப்படவேண்டும் என நிர்பந்திக்க முடியும்.  கமிட்டி அமைக்கப்பட்ட்து நமது சாதனை என்று மார்தட்டி சொல்ல முடியும்.
ஆனால், சில BSNLEU தலைவர்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தாங்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறத் துவங்கிவிட்டனர். இது முழுவதுமாக தவறான மற்றும் கேவலமான செயல். இது இவர்களால் முடிந்தது என்று சொன்னால், இத்தனை நாளாக அங்கீகாரம் பெற்ற சங்கமாக இருந்தபோதே இதை செய்திருக்க வேண்டியதுதானே என்று சாதாரண தொழிலாளி கேட்கிறான். நான்கு வருடமாக எதுவும் செய்ய இயலவில்லையே? அனைவரும் நன்கு அறிவர் 78.2 கிராக்கி இணைப்பைNFTE-BSNL சேர்ந்து போராடியால்தானே பெறமுடிந்த்து! அதே போல இப்போது NFTE-BSNL இந்த தவறான போனஸ் ஒப்பந்தத்தை மாற்றியே தீரும் என உறுதி கூறுகிறோம்.

சி.கே.மதிவாணன், அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர்,

No comments:

Post a Comment