WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, September 20

Flat or Plot .......

 அடுக்கு மாடி காலனியா ? வீட்டு மனையா ??
இனி சில வாரங்களுக்கு இது குறித்த பட்டிமன்றம் தமிழகமெங்கும் நடைபெறப்போகிறது.

20-9-13(நாளை)  நடைபெற உள்ள RGB கூட்டத்திற்கு பிறகு விவாதம் சூடு பிடிக்கும்.

17-09-2013 வரை சொஸைட்டி நிலம் பற்றி வாய் திறக்காத BSNLEU மாநிலச் செயலர்கள் செல்லப்பா,சென்னை கோவிந்த ராஜ் ஆகியோர், திடீரென்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டபின்னணியில் இந்த RGB கூட்டம் பரபரப்பாக கூடவுள்ளது.

அந்த அறிக்கை, சொஸைட்டித் தலைவர் திரு. எஸ். வீரராகவன் அவர்களை கையை முறுக்கி மிரட்டும்  வகையில் அமைந்துள்ளது மட்டுமல்ல, நமது தலைவர்களைப் பற்றி தவறான தகவல்களை  தெரிவித்துள்ளது,  பிரச்னையின் ஆழ, அகலங்களை விளக்குகிறது.

அந்த அறிக்கையில் முழுப் புசணிக்காயை சோற்றில் மறைப்பது போல ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது.

வெள்ளானூர் கிராமத்தில் இருந்த 95 ஏக்கர் நிலத்தை வாங்கியதில் நடந்த முறைகேட்டை தடுக்க  Save Telecom Society அமைத்து கடுமையாக பாடுபட்டார்களாம் ! அப்படியும் தடுக்க முடியவில்லையாம் ! 

இதற்கு பெயர்தான் அண்டப் புழுகு !! ஆகாசப் புழுகு !!!

உண்மை என்ன ?  நீண்ட நெடுங்காலமாக சொஸைட்டியில் நடைபெறும் முறைகேடுகளை தைரியமாக வெளிக்கொணர்ந்து தடுத்தாண்டவர் நமது மாவீரன் மதிவாணன் அவர்கள்தான்  என்பதை ஊரறியும் !

வேறு வழியில்லாமல் BSNLEUவும் அந்த படையில் சேர்ந்துகொண்டது என்பதே உண்மை !!.

கூட்டுறவு சொஸைட்டி, சிறப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டில் கொள்ளையரின் கூடாரமாக மாறியபோது, அதனை எதிர்த்து போராட, BSNLEU முன்னாள் மாநிலச் செயலர் தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்களை தலைவராகவும் தோழர் C.K.மதிவாணன் அவர்களை கன்வீனராகவும் கொண்டு  Save Telecom Society செய்த நற்செயல்களை மூடி மறைக்க செல்லப்பா தலைபட்டதேன்.....

  அந்த இரண்டு தலைவர்களும் பேட்டி கூட கொடுக்ககூடாது என்று நீதிமன்றம் மூலம் வாய்ப்பூட்டு போட முயன்றதையும் மறைத்தது ஏன் ?
 
நமது கடும் எதிர்ப்பையும் மீறி, சொஸைட்டி தனி அலுவலர் சம்பத் குமார், பல கோடி ரூபாய் கடன் வாங்கி, வெள்ளானூர் கிராமத்தில் 95 ஏக்கர் நிலத்தை வாங்கியதையும், தோழர் C.K. மதிவாணன் ,அந்த முறைகேட்டை அன்றைய முதல் அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற காரணத்தால்  அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா ? 

அதுமட்டுமல்ல !

முக்கியமான IAS அதிகாரியை சந்தித்து,  ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட  இயக்குனர் குழு பொறுப்பேற்க வைத்ததும் தோழர்C.K. மதிவாணன் அவர்களின் கடும் விடாமுயற்சியால் அன்றோ !!

 அதே சொஸைட்டி, அந்த  நிலத்தை ஒரு தனியாருக்கு விற்க முயன்ற போது, முறைகேடாக நிலம் வாங்கப்பட்டாலும் அது சொஸைட்டி உறுப்பினர்களின் கூட்டு சொத்து, அதன் பலனை அந்த உறுப்பினர்கள் தான் அனுபவிக்கவேண்டும் என்று கொடி உயர்த்தி, போஸ்டர் போட்டு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை  சென்னையில் திரட்டி போராடியதும் தோழர்C.K. மதிவாணன் அன்றோ....

நமது NFTE தமிழ் மாநில அமைப்புச் செயலர் கடலூர் தோழர் அன்பழகன்,  13-12-2012 அன்று சென்னையில் நடந்த RGB கூட்டத்தில்  சமரசமின்றி வாதாடியதால் தானே 
 " சொஸைட்டி நிலம் உறுப்பினர்களுக்கே"  என்று அக்கூட்டத்தில்  ஒருமனதாக ஏற்கப்பட்டு சாத்தியமானது. 

அதே கூட்டத்தில், BSNLEUவைச் சார்ந்த 2 RGB உறுப்பினர்கள் வீட்டுமனை வழங்குவததற்கு பதிலாக  அடுக்குமாடி வீடு  வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதன் முதலில் தெரிவித்தனர்.

அப்போதுதான், சொஸைட்டித் தலைவர் திரு வீரராகவன், நிர்வாகக் குழு, ஜனவரி 2013க்குள் சிறப்புப் பேரவையைக் கூட்டி இது பற்றி 
முடி வெடுக்கும் என்று அறிவித்தார்.ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை.

30-1-2013 அன்று நடந்த இயக்குனர் கூட்டத்தில் BSNLEUவைச் சார்ந்த சொஸைட்டித் தலைவர் வீ ரராகவன், பெருவாரியான உறுப்பினைர்கள் அடுக்குமாடி கட்டித் தருவதையே விரும்புகிறார்கள் என்று முன்மொழிந்ததோடு,  அனைத்து சங்கத் தலைவர்களையும் அந்தந்த சங்கத்தை சார்ந்த இயக்குனர்கள் கலந்தாலோசித்து தங்களது கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 அதன் அடிப்படையிலேயே சென்னை மாநில NFTEயைச் சார்ந்த இயக்குனர்கள், அம்மாநில சங்க தலைவர்களை கலந்தாலோசித்து செயல்படுகின்றனர்.

  நிலத்தை பிரித்து கொடுத்தால் சுமார் ஆயிரம் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும், ஒவ்வொருவரும் தனித்தனியாக விடு கட்டுவதும் சிரமமாக இருக்கும் . ஆனால் அடுக்கு மாடி என்றால் சுமார் 6500 பேருக்கு சகல வசதிகளும் கொண்ட ஒரு சிறு நவீன நகரம் போன்ற குடியிருப்பை உருவாக்கலாம்.... உறுப்பினர்களுக்கு அந்த அடுக்குமனை கிடைக்கும் பட்சத்தில், வங்கி கடன் ஏற்பாடு செய்ய சாத்தியப்படும்.  தேவைப் பட்டால் விண்ணப்பதாரரின், நல்ல வேலையில் உள்ள மகன்/மகள் பெயரில் கூட கட்டிடத்தை பதிவு செய்து தேவையான அளவு கடனை பெற ஏற்பாடு செய்யலாம்,  என்றெல்லாம தீர ஆலோசித்த சென்னை NFTE மாநில சங்க தலைமை அடுக்குமாடி கட்டிட திட்டத்திற்கு  பச்சைகொடி காட்டியது.    

இதையெல்லாம் மறைத்துவிட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று செல்லப்பா கோவிந்தராஜ் கூட்டணி, 17-9-13 அன்று திடீரென்று அறிக்கை வெளியிட்டு சொஸைட்டி தலைவர் வீரராகவனை மிரட்டுவதேன்?

நிலை தடுமாறுவதேன் ? மற்ற சங்க தலைவர்கள் மீது பழி சுமத்துவதேன் ?  மனம் மாறியது ஏன் ? மாற்றியது யாரோ ? பின்னணி என்ன என்பதை தீர ஆலோசிப்போம் !!  முடிவெடுப்போம் !! 
 
  

No comments:

Post a Comment