WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, August 15

சிதைந்து போன கனவுகள் ?


நாம் அறுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் 1947 வருடத்திலிருந்து ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுபற்றி சிறிது பரிசீலனை செய்வது நல்லது. சுமார் நம்மை ஐம்பது வருடங்களாக ஆண்ட காங்கிரஸ் கட்சி ஒருவேளை சோறு கூட இல்லாத ஏழை மக்களைப் பற்றி இப்போதுதான் நினைக்க ஆரம்பித்திருக்கிறது.

நம் நாட்டின் பொருளாதாரம் டாக்டர்.மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் வழிகாட்டுதலில் மிக மிக மோசமான நிலைமையை அடைந்துள்ளது. ஒருகிலோ வெங்காயத்தின் விலை கிலோ எண்பது ரூபாயும் வார வாரம் பெட்ரோல் டீசல் விலையேற்றமும் அத்தியாவசிய பொருள்களின் விண்ணை முட்டும் விலையும் சாதாரண மனிதனை கடுமையாக பாதித்துள்ளது.

நாம் சுதந்திரம் அடைந்த 1947-இல் ஒருரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு சமமாக இருந்த நிலைமை மாறி இன்று ஒரு டாலர் அறுபத்திஒரு ரூபாய்க்கு ஆகி உள்ளது.

இருபது வருடத்திற்கு முன்பு திரு.நரசிம்மராவ் அவர்களால் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நம்மை சொர்கத்திற்கே அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று ஏழைக்கும் பணக்காரணக்கும் உள்ள இடைவெளி பெரிதானதுமட்டுமல்லாமல் வேலையில்லா திண்டாட்டம் நம்மை பயமுறுத்துகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால் ஏழை மேலும் மேலும் பிச்சைகாரனாகவும் பணம் படைத்த பெரு முதலாளிகள் மேலும் மேலும் செல்வத்தை குவித்தவண்ணமும் உள்ளனர். இதுதான் நாம் காந்தி போன்ற தேசத் தலைவர்களால்  பெற்ற சுதந்திரத்தின் பலன்.

சுதந்திரத்தின் பலன் என்பது நம்முடைய நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாழ்வை உயர்த்தி அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வருவது நமது தலையாய கடமை ஆகும்.

நம்முடைய சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்க வந்துள்ள பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் நமது அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள் இவற்றிலிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை  காப்பாற்றுவது நமது உடனடி வேலையாகும்.


--கட்டுரை : தோழர்.C.K.மதிவாணன், NFTE-BSNL , அகில இந்திய உதவி பொதுச் செயலர். 15/08/2013

No comments:

Post a Comment