WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, May 15

சுய பரிசோதனை செய்வோம்! 6வது அங்கீகார தேர்தல் பற்றி!!

தமிழ்நாடு NFTE-BSNL மாநில சங்கத்தின் வெற்றி விழா அண்மையில் கும்பகோணத்தில் 14/05/13 அன்று நடைபெற்றது. விழாவில் RSS-ஐ சேர்ந்த ஒருவர் நம்முடைய சென்னை தொலைபேசி மாநில சங்கத்தை பற்றி தரக்குறைவாக பேசியதாகவும் தேவையற்ற விமர்சனங்களை கொட்டியதாக அறிந்தோம். இது போன்ற கருத்துக்கள் தமிழ் நாடு தொலைபேசி மாநிலத்தில் பேசப்படுவது மிகவும் வருத்தத்திற்குரியது. பேசிய அந்த குறிப்பிட்ட நபர் 10 வருடத்திற்கு மேலாக சந்நியாசம் பூண்டு சங்கத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்து விட்டு “திடீரென்று” மாநில செயற் குழு உறுப்பினர் ஆனவர்.  கடந்த காலத்தில் நடந்த எந்த தொழிற்சங்க விசயங்கள் பற்றியும் தெரியாத அந்த நபர் சென்னை மாநிலத்தை பற்றி விமர்சிப்பதற்கு முன் தங்களுடைய மாநிலத்தில் நடைபெறும் சிக்கல்களை சரி பண்ணுவது  தலயாயக் கடமை என்று நாங்கள் மதிப்பு வைத்துள்ள   தமிழக தோழர்களை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறோம்.
நான்கு மெட்ரோ நகரங்களில் கடந்த 15 வருடங்களாக சென்னையில் மட்டும்தான் NFTE-BSNL கொடி உயரப்பறந்து கொண்டிருக்கிறது. கடந்த எட்டு வருடங்களாக அங்கீகாரம் இல்லாத சூழ்நிலையிலும் சென்னையில் NFTE-BSNL 36.2% சதவிகித ஓட்டுக்களை பெற்றது. அதே சமயத்தில் அகில இந்திய அளவில் NFTE-BSNL 30.2%  மட்டுமேஓட்டுகளை பெற்று உள்ளது, இதைபற்றி எதுவுமே தெரியாமல் சென்னைதொலைபேசிச் சங்கத்தை விமர்சித்து திருவாளர் “குருநாதர்” பேசுவது சரியா?.  அதுவும் தமிழ் மாநில செயலரும் .அகில இந்திய செயலரும் மேடையிலிருக்கும்போது நாம் அகில இந்திய அளவில் 5% ஓட்டுக்கள் குறைத்து பெற்றிருக்கின்ற சூழிநிலையில் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.? அதனை தமிழ் மாநிலச் செயலரும் பொதுச்செயலரும் ரசித்து கேட்பது (அ)நியாயமா?
அகில இந்திய அளவில் BSNLEU எந்தவிதசாதனைகளும்  செய்யாமல் 2% ஓட்டு அதிகமாக வாங்கியுள்ளது, அதே சமயத்தில் NFTE-BSNL 5% ஓட்டுக்கள் குறைத்து பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா? இது நமக்கு 6வது அங்கீகார தேர்தலில் கிடைத்த அதிர்ச்சியான செய்தி இல்லையா? இந்த பின்னடைவு எப்படி ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? தமிழக மாநில சங்கம் பல் வேறு தலைவர்களாலும் எந்த வித பிரதி பலனும் எதிர்பார்க்காத தோழர்களாலும் ஒவ்வொரு கல்லாக சேர்த்துக்கட்டி வடிவமைக்க பட்டதாகும். மோசமான சூழ்நிலையில் கூட தமிழ் மாநிலம் 50% குறைந்து இதுவரை ஓட்டு வாங்கியதில்லை. ஆதலால் நீங்கள் முதலில் தமிழ் மாநிலத்தில் ஏன் ஓட்டுக்கள் குறைந்தது என்பதை அலசி ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். அதன் பிறகே ஓட்டுக்கள் குறைந்தது சென்னை தொலை பேசியிலா அல்லது அகில இந்திய சங்கத்திலா என்று பேசவேண்டும்!. விமர்சனம் செய்ய வேண்டும்!!.
  ஆனால் சென்னையில் NFTE-BSNL க்கும் BSNLEUக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம் 1% மட்டுமே. என்பதை இங்கு வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.
          இறுதியாக நாங்கள் மேன்மைபொருந்திய தலைவர்களுக்கு ஒன்றைசொல்லி கொள்ள விரும்புகிறோம். அங்கீகார தேர்தலுக்கு பிறகு சென்னையில் மாற்று சங்கங்களை சேர்ந்தவர்கள் அச்சங்கத்தை விட்டுவிட்டு நம்மிடம் இணைந்த வண்ணம் உள்ளனர். புது கிளைகள் தொடங்கிய வண்ணம் உள்ளது. சென்னை தொலை பேசி மாநிலம் NFTE-BSNL அருமைத் தோழர் மதிவாணன் தலைமையில் பீடு நடை போட்டு முன்னே போய் கொண்டு இருப்பது உண்மை.


வெளியீடு: சென்னை தொலைபேசி மாநிலம்.....

No comments:

Post a Comment