WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, May 31

பி.எஸ்.என்.எல் கையடக்கக் கணினி அறிமுகம்!


பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு சேவை மையம் மற்றும் பென்டா தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து இணையதளப் பயன்பாட்டுக்கான கையடக்கக் கணினியை (டேப்லெட்) அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடந்தது. இதில் 2 வகையான கையடக்கக் கணினிகள் (டேப்லெட்) அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர்
ஏ.சுப்ரமணியன் பேசினார். 

புதிய ராணுவ தளபதியாக பிக்ரம் சிங் பதவியேற்பு !!!




 இந்திய ராணுவத்தின் 25வது தலைமை ராணுவ தளபதியாக பிக்ரம் சிங் இன்று பதவியேற்றுள்ளார். 59 வயதாகும் பிக்ரம் சிங் அடுத்த 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களுக்கு தலைமை ராணுவ தளபதியாக பதவி வகிப்பார்.






ராணுவ தளபதியாக இருந்த வி.கே. சிங் இன்று ஒய்வு பெற்றார். அவர் ராணுவ மரியாதையுடன் வழியனுப்பப் பட்டார்.

Wednesday, May 30

Programme changed !!


31st May Programme changed to 1st June, 2012 : Lunch hour demonstration at circle/SSA levels will be held on 1st June instead of 31st May, 2012. This change is due to Bharat Bandh on 31st May, 2012.
                                                             chq......

Fight against discriminations !!


The management of BNSL has fallen at the feet of ITS officers  numbering about few thousands to make them opt for BSNL. In the name of financial difficulties the management had snatched many facilities enjoyed by our employees including bonus, medical allowances, LTC etc, etc. But the same management has offered many new facilities at the cost of Rs 1300 crores to all ITS officers who have so far adamantly refused to opt for BSNL.  It is unfair and discriminatory in nature. Hence all unions /associations decided to organize joint programs as follows.


Lunch Hour demonstration on 31/05/2012
Day long Dharna on 06/06/2012
Indefinite strike from 13/06/2012
 Mobilize the employee massively throughout the country to teach a lesson to the management which is favouring only ITS officers and not considering the genuine demand of the employees like 78.2% IDA merger, five promotion, SC/ST reservation in NEPP etc, etc. All our comrades and office bearers are requested to organize jointly the above program and participate fully in it.


C.K.Mathivanan


CS, NFTE-BSNL

Wednesday, May 23

2012-13க்கு GPF வட்டி 8.8% !!

Revised Rate of GPF Interest from 01-12-2011 Letter No-CA-II/BSNL/GPF RECON/2012-13/20 Dated-18-05-2012. chq....



இந்த நிதி ஆண்டில் GPFக்கிற்கான வட்டி விகிதம்
8.8 சத விகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு 
அறிவித்து உள்ளது.
 தற்போது இது 8.6 சதமாக உள்ளது

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்:!!!



பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது பணவீக்கத்துக்கு வழிவகுக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tuesday, May 22

முதல் மாணவி சுஷ்மிதா!!


நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுஷ்மிதா மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 1200 மதிப்பெண்களுக்கு 1189 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்






மீண்டும் இன்று பேச்சுவார்த்தை!!!


சென்னையில் உள்ள என்எல்சி மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (மே 22) பேச்சுவார்த்தை நடக்கிறது.


நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல், உண்ணாவிரதம் உள்பட பல போராட்டங்களை நடத்தினர். பிரச்சினைக்கு தீர்வு காண பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் சுமூக முடிவு ஏற்படவில்லை.

அதையடுத்து இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.


ஏர்இந்தியா விமானிகள் வேலைநிறுத்த போராட்டம் இன்று 15-வது நாளாக நீடிப்பு!!

ஏர்இந்தியா விமானிகள் வேலைநிறுத்த போராட்டம் இன்று 15-வது நாளாக நீடிக்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக ஏர்இந்தியா நிறுவனத்துக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Monday, May 21

NFTE(BSNL)இனையதளம் !!

புதிய முயற்சியாக மதுரை மாவட்டம் இனையதளம் துவங்கி இருப்பது வரவேற்க்கதக்கது! வாழ்த்துக்கள் !! 

குடியரசுத் தலைவர் பதவி!!!


ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது !!!


பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

Sunday, May 20

Retain ITS Officers!!

H on’ble Delhi High Court has permitted the BSNL Management to retain ITS officers upto 30th Sept,2012.
                                                 CHQ........ 

எவரெஸ்ட் சிகரம் ஏறி 73 வயது பெண் சாதனை!!

உலகிலேயே அதிக உயரமான சிகரம், இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரமாகும். 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவதே, மலையேறும் வீரர்களின் வாழ்நாள் லட்சியம்.. 

சரத் பொன்சேகா விடுதலை !!!

இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.

Friday, May 18

வணங்குகிறோம் !!

தோழர் ,த.பாண்டியன் அவர்களின் வயது 81...இன்று அவரின் பிறந்த நாள் 
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் !! 

ஏர் இந்தியாவுக்கு ரூ.200 கோடி நட்டம் !!!

 ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 11வது நாளை அடைந்துள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.200 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.

தனிக்கட்சி துவங்குகிறார் 'சுரங்க' புகழ் எடியூரப்பா!!!

சுரங்க ஊழலில் சிக்கி திக்கித் திணறி வரும் எடியூரப்பா பாரதீய ஜனதா கட்சியில் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லை போலும். எனவே, தனிக்கட்சி தொடங்க தீர்மானித்துள்ளார். கட்சிக்கு கர்நாடக ஜனதா கட்சி என்று பெயர் சூட்டவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Wednesday, May 16

NFTE-BSNL இளைஞர் அமைப்பின் அறைகூவல் !!


தலைவன் தோழர் ஜெகன் ............   பிறந்த நாள் 17-5-12
               .
பதவிகள் அவரைத் தேடி வந்தது!                                                                                                                                                                                          அவர் அதை தேடவில்லை!!                                                                                                        தமிழத்தில் உள்ள இளைஞர்களின் நாளாக கொண்டாடுக !!!  
.
தோழர் தங்கமணி திருமணத்தை புதுவையில் 
தலைமை ஏற்று குடும்ப விளக்கை ஏற்றியவர்.
தோழர் ஜெகன் .....     

எடியூரப்பா வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை !!!


கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா 2 வீடுகள் உட்பட 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்திவருகின்றனர். சுரங்க முறைகேட்டில் எடியூரப்பா மீது வழக்குபதிவு செய்யப்பட்டதை அடுத்து, இந்த சோதனை நடந்து வருகிறது. பெங்களூரில் உள்ள எடியூரப்பாவின் 2 வீடுகளிலும், அவரது இரு மகன்கள் மற்றும் மருமகன் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 6 பேர் கொண்ட சிபிஐ குழு தற்போது சோதனை நடத்தி வருகிறது.

Tuesday, May 15

Raja gets bail, told not to visit TN, telecom dept !!


Over 15 months after he was arrested, former telecom minister A Raja was today granted bail by a Delhi court in the 2G spectrum case. Under his bail conditions, the prime 2G scam accused cannot visit Tamil Nadu without the court’s permission and has been forbidden from visiting the office of the Department of Telecom.

Trai Recommends Rs 2,750 cr !!!


Telecom regulator Trai on Monday recommended a financial support of Rs 2,750 crore to BSNL to sustain its rural wireline connections installed before April, 2002. 


"The support to BSNL should be continued for two years for sustenance of rural wire-line connections, installed before April 1 , 2002 with effect from July 18, 2011. The amount of support may be Rs 1,500 crore for the first year and Rs 1,250 Crore for the second year," Trai said. 


BSNL had requested support of Rs 2,580 crore per year for the same. 

சிரஞ்சீவி மகள் வீட்டில் ரூ.35 கோடி !!


கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் உள்ள சிரஞ்சீவியின் மருமகன், மகள் சுஷ்மிதா மற்றும் உறவினர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். 
. சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா வீட்டில் நடந்த சோதனையில் அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக வைத்திருந்த ரூ.35 கோடி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, May 14

Khullar is new TRAI chief !!


Commerce Secretary Rahul Khullar has been appointed as the chairman of the Telecom Regulatory Authority of India (TRAI) with immediate effect.


Mr. Khullar, a 1975-batch IAS officer, will take over from J.S. Sarma on Monday. He will have a three-year term. His appointment, cleared by Prime Minister Manmohan Singh, comes at a time when the telecom industry is fiercely protesting against the recent proposal of the telecom regulator on auctioning of 2G spectrum.


TRAI's recommendations followed the Supreme Court's February 2 judgement, cancelling 122 licences of nine telecom companies and asking the government to redistribute them on the first-come, first-served basis.


It is learnt that government has sought certain clarifications from TRAI on its recommendations for which a detailed response is being drafted. Mr. Khullar was personal secretary to Dr. Singh when he was the Finance Minister in the Narasimha Rao government.

தோழர் .ஜெகன் படம் திறப்பு !!

கோவையில் நடை பெற்ற கலை இலக்கிய பெருமன்றத்தின் 50 வது பொன்விழா மாநாட்டில் தோழர் ,ஜெகன் படம் திறக்க பட்டது .தோழர், த.பா ,ஜெகனுடன் திண்டுக்கல்லிருந்து முதல் கோவை மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் நின்றுகொண்டு வந்ததை நினைவுபடுத்தி உரைநிகழ்த்தினர் .   

Friday, May 11

தமிழ்மாநில சங்கம் !!!

நெய்வேலி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்திற்க்கு ஆதரவாக 12-05-2012 ல் மாவட்ட தலைநகரில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வேலை வா‌ய்‌ப்பு ப‌திவு பு‌து‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்க‌ளு‌க்கு மீண்டும் வாய்ப்பு !!

2008, 2009, 2010ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவ‌ர்களு‌க்கு த‌மிழக அரசு ‌மீ‌ண்டு‌ம் ஒரு வா‌ய்‌ப்பை அ‌ளி‌த்து‌ள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம்!!

நெய்வேலியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர், 500க்கும் மேற்பட்டோர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர், கடந்த, 21 நாட்களாக, தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில், நேற்று காலை, 10 மணிக்கு அரை நிர்வாண போராட்டம் நடந்தது. 

ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்த போராட்டம்! விமானங்கள் ரத்து!!


ஏர் இந்தியா விமானிகள் இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளதையடுத்து 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


ஊதிய உயர்வு, போனஸ் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தைத் தொடங்கினர்.


முதல் நாள் நடத்திய போராட்டத்தின்போது விமானிகள் சங்கத்தை சேர்ந்த 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


நேற்று இரண்டாம் நாள் போரட்டத்தின் போது, டெல்லி உயர்நீதிமன்றம் விமானிகளின் போரட்டம் சட்ட விரோதமானது என்று அறிவித்ததை தொடர்ந்து, மேலும் 26 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள விமானிகளின் எண்ணிக்கை மொத்தம் 36 அதிகரித்துள்ள நிலையில், விமானிகளின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது

Wednesday, May 9

நெஞ்சார வாழ்த்துகிறோம் !!


கும்பகோணம் மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற்றது !

தமிழ்மாநில செயற்குழு ,கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது !!

தோழர் ,சேது பணி பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது !


ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார் ஆ.ராசா !!


2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திவிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மொபைல் போன் கட்டணம் உயரும் !!!

புதிய ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட உள்ள நிலையில், அவை அதிக விலைக்கு ஏலம் விடப்படும் பட்சத்தில், மொபைல் போன் நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தமிழக பஸ்களில் 'GPS' உதவியுடன் மின்னணு பயணச் சீட்டுகள் !!!!


சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆறிவித்துள்ளார்.

Sunday, May 6

செய்திகள் !!!


எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கவல்ல ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாவிலாதோப்பை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் மகன் கோபால சுந்தரராஜ்,26, ஐ.ஏ.எஸ்., தேர்வில், தேசிய அளவில் ஐந்தாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 11-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 15-ந் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் தெரிவித்துள்ளார்.

Saturday, May 5


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தே‌ர்‌வி‌ல் 68 தமிழ‌ர்க‌ள் வெற்றி !!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்‌வி‌ல் தமிழ்நாட்டில் 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 34 பேர் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவ‌ர்.

Friday, May 4


திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில் நடந்த ரூ.650 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஜி பிரமோத்குமாரின் வங்கி கணக்கு, பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இல‌ங்கை‌யி‌ல் 90,000 ‌விதவைக‌ள் !!


இலங்கையில் போரின் போது கணவன்மாரை இழந்த 90 ஆயிரம் வரையான பெண்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாக இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, May 3


Private Telecom Firms owe over Rs. 550cr to BSNL: Out standing dues of BSNL against major Telecom operators, as inter connect usage charges (ICU) Bharti irtel =169.07cr(2) Idea=121.36cr(3) Reliance Commu Ltd.=101.63cr.(4) Vodafone =49.54cr(5) TTCL=33.83cr (6)VESL=29.72cr. (7)Spice cellular=14.54cr (8)Reliance Telecom Ltd=9.23cr.(9)Data Access=6.89cr (10) DSL=4.50cr. (11) TCL=4.32cr (12)Dish net =2.96cr (13) Aircel =2.20cr (14) Reliance info=1.09cr. 
                                                   
                                                                                                 chq.....

இதை எழுதிய தந்தை!!


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!


தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். 


பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.


வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.


மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.


குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.


அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.


இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

Wednesday, May 2

அலெக்ஸ் பால் மேனனை நாளை விடுவிக்கபோவதாக மாவோயிஸ்டுக்கள் அறிவிப்பு!!

கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை நாளை வியாழக்கிழமை விடுவிக்கவுள்ளதாக மாவோயிஸ்டுக்கள் அறிவித்துள்ளனர்.

மதுரையில் அதிகாலையில் பயங்கரம் !!!


 மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்டு "டைம்பாம்'' குண்டு வெடித்தது.