WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, July 5

பத்மநாபசுவாமி கோவிலில் மேலும் பல கோடிக்கு பொக்கிஷம்!!


திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோவிலின்  கடைசி ரகசிய அறையும் திறக்கப்பட்டது. இந்த அறையிலும் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளதாகவும் இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க வைர மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் இருப்பதாகவும் இவற்றை பலரும் அபகரித்து வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஆனால் இந்த ரகசிய  அறைகளை திறக்கக்கூடாது என்று  கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த ரகசிய அறைகளை திறந்து அந்த அறைகளில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினர் ரகசிய அறைகளில் ஐந்தை திறந்து பார்த்தனர். இந்த அறைகளில் ஏராளமான தங்க வைர ஆபரணங்கள் இருந்தன. ஏராளமான தங்கக் குடங்களில் தங்கக் காசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் 5 ஆம் எண் அறையின் பூட்டை உடைக்க கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டி இருந்தது. இதனால் அந்த அறையை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த அறையை திறப்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பவே அந்த அறையை திறக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் பல லட்சம் கோடி ரூபாய் பொக்கிஷங்களை உடைய பத்மநாப சுவாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது ஐந்தாவது எண்  அறையும் ஆய்வுக் குழுவினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஏற்கனவே திறக்கப்பட்ட அறைகளைப் போலவே இந்த அறையிலும்  ஏராளமான பொன்னும், மணியும், வைர நகைகளும் இருந்ததாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 300 தங்கக் குடங்களில் தங்கக் காசுகளும், நகைகளும் இருந்ததாகவும், மேலும் சிறியது முதல் பெரியது வரை 2000 வைர நகைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றன.  இந்த நகைகளின் மதிப்பை அளவிட குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வர கடவுளாக இருந்த பத்மநாப சுவாமி, தற்போது மேலும் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.

No comments:

Post a Comment