WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, July 6

புதுவை கவர்னர் இக்பால் சிங் பதவி விலகும்படி மத்திய அரசு உத்தரவு!!


மத்திபிரதேச மாநிலம் புணேவை சேர்ந்த தொழில் அதிபர் அசன் அலி ரூ.45 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பதுக்கியதாக கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே 1997 ம் ஆண்டு அசன் அலி கடவுச்சீட்டு எடுப்பதற்கு புதுவை கவர்னர் இகபால் சிங் சிபாரிசு செய்ததாக புகார் கூறப்பட்டது. இக்பால்சிங் அப்போது மேல் சபை எம்.பி.யாக இருந்தார். அவர் அசன் அலிக்கு கடவுச்சீட்டு வழங்கும் படி வெளி விவகாரத் துறைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார். அதேபோல அசன் அலி நண்பர் காசிநாத் தபுரியா, அவரது மனைவி ஆகியோருக்கும் கடவுச்சீட்டு வழங்கும்படி சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தது தெரியவந்தது.


இதனால் அசன் அலிக்கும், இக்பால்சிங்குக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 3 முறை புதுவை வந்து கவர்னர் இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த பிரச்சினையையடுத்து கவர்னர் இக்பால்சிங் பதவி விலக வேண்டும் என்று புதுவையில் பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தின. முழுஅடைப்பும் நடைபெற்றது.



அகில இந்திய அளவில் பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும் இக்பால் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால் அவர் பதவி விலகாமல் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் கவர்னர் இக்பால்சிங் கடந்த 2 ம் திகதி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை உள்துறை அதிகாரிகள் அழைத்து பேசியதாக தெரிகிறது. இதையடுத்து கவர்னர் இக்பால் சிங் ஒரு வாரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எனவே இக்பால்சிங் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவி விலகினால், தமிழ்நாடு கவர்னர் பர்னாலா புதுவை மாநில பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். இக்பால்சிங் 2009 ம் ஆண்டு ஜூலை மாதம் புதுவை கவர்னராக பதவி ஏற்றார். அவருடைய 3 ஆண்டு பதவிகாலம் இப்போது முடிய இருக்கிறது.
மத்திய அரசு நினைத்தால் அவருக்கு பதவி காலத்தை நீடிப்பு செய்திருக்கலாம். பிரச்சினையில் சிக்கியதால் அவரை பதவி விலகும்படி மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment