WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, April 20

போபாலில் நடைபெற்ற அகிலஇந்திய செயற்குழுவில் புதுச்சேரி தோழர்களை பொதுச்செயலர் தோழர், C சிங் அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்து ,தங்குவதற்க்கு சிறப்பான ஏற்ப்பாடும் செய்து கொடுத்தார் துனணபொதுச்செயலா் தோழர் ,C K மதிவாணன் அவர்கள். 
   BSNLEU சங்கத்தின் பொதுச்செயலர் அபிமன்யு வாழும் புதுவை  மாவட்டத்தில் , NFTE(BSNL) சங்கத்தின் வெற்றியைய் சிறப்புடன் எடுத்து கூறி உரை நிகழ்த்தினார் மாநில செயலர் தோழர் R.பட்டாபி அவர்கள்.
    புதுச்சேரியின் வெற்றிக்கு செயற்குழுவில் அனைவரும் கரவொலி மூலம் பாராட்டினர். மாவட்ட செயலர் இரா. தங்கமணியை மேடையில் அமரவைத்து பாராட்டும் தெரிவித்தார் பொதுச்செயலர் தோழர், C சிங் அவர்கள்.

   மாநில செயலர்களை பாராட்ட   அழைத்தபோது எங்கள்  தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குஉரியவர்கள் என கூறினார், தோழர்கள் சுப்பராயன், கோவை . மாரி, காரைக்குடி. தங்கமணி, புதுவை. மாநில செயலர்  பட்டாபி ஆகிய அனைவரையும் கெளரவித்தனர். பெருமைக்குரியவர்களாக்கிய தலைவர்களுக்கும், தோழர்களுக்கும், போபால் வரவேற்புகுழு தோழர்களுக்கும் நமது நன்றி !நன்றி !!நன்றி !!!

No comments:

Post a Comment